15 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு! சாலை மறியலில் ஈடுபட்ட 10 கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


சாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி சீட்டு விளையாடும் பொதுமக்கள்! 

காரைக்காலில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 15 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை உடனடியாக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுச்சேரி மாநில மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனை எதிர்த்து புதுச்சேரி மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலித்தல், பராமரிப்பு பணி போன்ற எல்லா பணிகளும் முடங்கியுள்ளது. 

நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு மின் தடை ஏற்பட்டது. மேலும் இன்று காலை காரைக்காலில் மையப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை சரி செய்யப்படவில்லை. அந்தப் பகுதிகளில் 15 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு குடிநீர் வினியோக பணியும் தடைபட்டுள்ளது.  

இதனை கண்டித்து இன்று மதியம் நூற்றுக்கும் மேற்பட்டோர் காரைக்கால் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்த இருந்தனர். இதனை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மாலை வரை மின்சாரம் வழங்கப்படாததால் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுக்கின்றனர். இதனால் வாகனங்கள் கும்பகோணத்தில் நெடுஞ்சாலையில் 4 கி.மீ அணிவகுத்து நிற்கின்றன. 

இரவு இரவு வரை போராட்டம் நீடித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர் மெழுகுவர்த்தி ஏந்தி சாலையில் சீட்டு விளையாடி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut for more than 15 hours 10 villagers involved in road blockade


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->