சிறைக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி.!! தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரவுடி ஸ்ரீனிவாச சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். தொடர்ந்து அவர் பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

இந்த நிகழ்வை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சிறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்ததும், அந்த வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர்? பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

popular rowdy birthday cake cutting in banglore jail


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->