கஞ்சா கடத்த கபட நாடகம்.. கைதான முக்கிய புள்ளிகள்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வேள்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்குள்ள முருகம்பாக்கம் பகுதியை சார்ந்த அன்பு மற்றும் சிவா ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலளத்தை கைப்பற்றிய நிலையில், இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நைனார் மண்டபம் பகுதியை சார்ந்த கீர்த்திவாசன் மற்றும் ஜான்பால் ஆகியோர் செய்த திட்டம் அம்பலமானது. 

புதுச்சேரியில் இருந்து ஜான்பால், கீர்த்திவாசன் ஆகியோர் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு டாட்டா எஸ் வாகனம் மூலமாக கிருமி நாசினி எடுத்து செல்வது போல சென்ற நிலையில், புதுச்சேரிக்கு மீண்டும் விரைகையில் 150 கஞ்சா பொட்டலத்துடன் வந்துள்ளனர். 

மேலும், ஒரு பொட்டலம் ரூ.300 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களின் வாகனம் மற்றும் இரண்டு அலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்த சமயத்தில் கைதாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondichery Kanja sales gang arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal