கட்டத்துல எழுதணும், தெரிந்தவர்களை சேர்த்து விடணும்.. காசு., பணம்., துட்டு என படம் காட்டி மோசடி?.! - Seithipunal
Seithipunal


நூதன முறையில் மக்களை ஏமாற்றிய நிறுவனம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலை பகுதியில் தனியார் அவுட்சோர்சிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் வீட்டில் இருந்துகொண்டே வேலைகளை செய்யலாம் என விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர முதலில் நபருக்கு ரூ.2,800 பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய புதுச்சேரி, கடலூர், மரக்காணம் பகுதியை சார்ந்த 600 க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். 

அவர்கள் முதலில் பணம் செலுத்தி சேர்ந்ததும், உங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்துவிட்டால் ரூ.600 பணம் வழங்கப்படும் என தெரிவிக்கவே, பலரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை சேர்ந்துள்ளனர். 

இதில் உறுப்பினராக சேர்ந்தவர்களிடம் 100 பேப்பர்கள் வழங்கி, அந்த பேப்பரில் உள்ள கட்டத்திற்குள் குறிப்பிட்ட நம்பர் மற்றும் எழுத்துக்களை எழுதிக்கொடுத்தால், குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கூறியவாறு எழுதிக்கொடுத்தவர்களுக்கு பணம் வந்துள்ளது. கடந்த 6 மாதமாக நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று வழக்கமாக எழுதி கொடுப்பவர்கள் சரியாக எழுதி கொடுப்பது இல்லை என நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் நிறுவனத்திற்கு முன்னர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை உருவாக, உருளையன்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் என்பவரிடம் விசாரணை நடத்த, அவர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பேப்பரில் எழுதப்படும் நம்பர் மற்றும் எழுத்துக்களை வைத்து என்ன செய்கிறார்கள்?. அதனால் எப்படி வருமானம் வருகிறது?. அந்த நிறுவனம் யாருக்காக? எதற்காக பணி செய்கிறது என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry Nellithope Area Private MNM Forgery Company siege by Woman and Employees


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->