திருமண மண்டபத்திற்குள் நுழைந்த மர்ம நபர்; காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் நிறுத்தம்; நடந்தது என்ன..?
Police Sub Inspectors Wedding Halted by Mysterious Intruder at the Marriage Hall
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜான் மேஜர். இவருக்கு பஸ்தி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமகனின் தந்தை கல்லூரி முதல்வர் என்பதால், தனது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கல்யாண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.
அதன்படி திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உர்வலமாக செல்ல மணமகன் ஆயத்தமாகியுள்ளார். அப்போது அழையா விருந்தாளியாக இளைஞர் ஒருவர் அங்கு வந்து, நேராக மணமகனின் பெற்றோரிடம் சென்றுள்ளார்.
அந்த இளைஞர் 'காவல் உதவி ஆய்வாளரான உங்கள் மகன் கட்டிக்கப்போகும் பெண், தனது காதலி என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், தானும், அந்த பெண்ணும் 05 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அவரை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இதே மன நிலையில் தான் தனது காதலி (மணப்பெண்ணும்) உள்ளதாக தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த நிலையில், கல்லூரி முதல்வரான மணமகனின் தந்தை மிகவும் பக்குவத்துடன் இளைஞர் கூறியதை பொறுமையாக செவி கொடுத்து கேட்டுள்ளார். அவர் கூறியது உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக மணப்பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
அவரும் அந்த இளைஞர் கூறியது அத்தனையும் உண்மை தான் என்று ஆமோதித்துள்ளார். உடனே நடைபெற இருந்த திருமணத்தை கைவிடுவதாக மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்த நிலையில், அதை அறிந்த பெண் வீட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளனர்.
அப்போது காதலன் 'உங்களது மகளுக்கு தான் வாழ்க்கை கொடுப்பதாக கூறியுள்ளார். கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், வேறு வழியின்றி அதே கல்யாண மண்டபத்தில் காதல் ஜோடி இருவருக்கும் திருமணம் செய்ய பெண் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதைனிடையே, திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு மணப்பெண்ணின் காதல் விவகாரம் தெரிந்ததால் மணமகனின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Police Sub Inspectors Wedding Halted by Mysterious Intruder at the Marriage Hall