திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் மாமனார் மைத்துனர் உள்ளிட்ட மூவர் கைது..! நடுரோட்டில் நடந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான யூசுப் பதானின் மாமனார் மற்றும் மைத்துனர் உள்ளிட்ட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மும்பையின் பைகுல்லா பகுதியில் யூசுப் பதானின் உறவினரான ஷோயப்கான் நடந்து சென்று கொண்டிருந்த போது, உள்ளூர்வாசியான யூசுப் கான் என்பவர் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் தண்ணீர் தேங்கியிருந்ததை கவனிக்காத யூசுப்கான், தனது காரை வேகமாக அதற்குள் செலுத்தியுள்ளார்.

அப்போது அதிலிருந்த தண்ணீர் தெறித்து நடந்து சென்று கொண்டிருந்த, ஷோயப் கான் மீது தெளித்துள்ளது. உடனே காரை நிறுத்திய அந்த நபர் இறங்கி வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ஆத்திரத்தில் ஷோயப் கான், அவரைக் கடுமையாகத் திட்டியதுடன், அருகில் கிடந்த மூங்கில் தடியால் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். மேலும் காரை ஓட்டி வந்த நபர் மீதும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் யூசுப்கான் மனஉளைச்சலானதுடன், வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனே காவல்துறையில் புகார் அளிக்குமாறு அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதற்காக யூசுப்கான் தனது சகோதரர் சல்மான் மற்றும் மாமா ஜாகி அகமது ஆகியோருடன் காவல்நிலையத்திற்கு காரில் கிளம்பியுள்ளார்.

அப்போது செல்லும் வழியில், கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் மாமனார், காலித் கான், மைத்துனர் உமர்ஷத் கான், மற்றும் ஷோயப் கான் ஆகியோர் காரை வழிமறித்துள்ளனர். கையில் பேஸ்பால் மட்டை, மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் நின்ற அவர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு,தொடர்ந்து அவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சண்டையில், காரிலிருந்த சல்மான் மற்றும் ஜாகி அகமது ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் யூசுப் பதானின் மாமனார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former cricketer Yusuf Pathans father in law and brother in law arrested


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->