நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்..! - Seithipunal
Seithipunal


சயிப் அலிகான் வீட்டுக்குள் காலை ஒரு மர்ம நபர் திருடுவதற்காக புகுந்தோடு, அவனை பிடிக்க சென்ற நடிகர் சயிப் அலிகான் மீது அவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடு பட்டு தப்பியோடியுளான். 

இதில், சயிப் அலிகானுக்கு முதுகு தண்டுவடம், மார்பு உள்ளிட்ட 06 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.அதில் 2 இடங்களில் கத்தி ஆழமாக கிழித்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சத்குருவ ஷரன் கட்டிடத்தில் உள்ள நடிகரின் 12வது மாடி குடியிருப்பில் ஊடுருவியவர் வலுக்கட்டாயமாக நுழையவில்லை என்றும், இரவில் முன்னதாகவே பதுங்கிச் சென்றிருக்கலாம் என்று ஒரு போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மும்பை பந்த்ராவில் அவரது மனைவி  நடிகை கரீனா கபூர் தம்பதி வசித்து வருகின்றார். நேற்றிரவு வழக்கம் போல சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான். இதனை  கவனித்த நடிகர் சயிப் அலிகான், அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போதே இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சூழலில், சயிப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாகவும், சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police release photo of the accused who stabbed actor Saif Ali Khan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->