மனைவியின் உடலை தோளில் சுமந்த கூலித் தொழிலாளி.. போலீசாரின் உதவிக்கு குவியும் பாராட்டு..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் சரோடா கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சாமுலு என்பவரின் மனைவி இடுகுரு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

ஒரிசா மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக தனது மனைவியை அனுமதித்து இருந்தார்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமுலு மனைவி இடுகுருவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனை அடுத்து சாமுலு வாடகை ஆட்டோ மூலம் தனது மனைவியை அழைத்துச் செல்லும் பொழுது வழியிலேயே இறந்துள்ளார். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் நடுவழியில் இருவரையும் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியின் உடலை தொழில் சுமந்தபடி நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சாமுலுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பிறகு சாமுலு மனைவியின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கட்டணம் ஏதுமின்றி அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police helping man carrying his wife dead body on shoulders


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->