குடிபோதையில் வீட்டில் புகுந்து நடனமாடிய காவல்துறை.! பெண்களிடம் தகாத சீண்டல்.!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில், மீரட் பகுதியில் ஒரு காவல்துறை படை பெண்கள் இருந்த வீட்டிற்குள் புகுந்து பொருட்களை கொள்ளை அடித்ததாக அந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஜூலை நான்காம் தேதி சனிக்கிழமை இரவு நேரத்தில் காவல்துறையினர் சட்டவிரோதமாக விலங்குகளை கொன்றதாக கூறி அந்த பகுதியில் இருந்த அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது உமர் என்பவருடைய வீட்டிற்குள் சீருடையில் நுழைந்த காவல்துறையினர் அவரை கேட்டு அந்த வீட்டில் இருந்த பெண்களைக் கொடுமைப் படுத்தி இருக்கின்றனர். 

மேலும், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டில் உமர் இல்லை அவர் வெளியூர் சென்றிருக்கிறார் என்பதை வீட்டில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை நம்பாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கி போட்டு உடைத்ததாகவும், வீட்டில் இருந்த பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் பொருட்களை உடைக்கும் பொழுது நடனம் ஆடியதாகவும் வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆனால், காவல்துறையினர் இதுகுறித்து அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் விலங்குகளை கொன்றதாக புகார் வந்தது, அதன் அடிப்படையில்தான் அந்த பகுதியில் நாங்கள் சோதனை நடத்தினோம். அப்பொழுது அவருடைய வீட்டிற்கு சென்று கேட்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் என்று விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police harassment women in uttar predesh 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal