பீஹாரில் நடந்த ஆர்ஜேடியின் காட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்; பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


வரும் நவம்பர் 06, மட்டும் 09-ஆம் தேதிகளில் பீஹார் சட்டசபை தேர்தல்  இருக்கட்டங்களாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பீஹார் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பாஜவினருடன் கலந்துரையாடியுளளார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்தின் திருவிழாவை பீஹார் கொண்டாடவுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு புது அத்தியாயம் எழுதுவதற்காக நடக்கும் தேர்தல் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் பீஹார் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும், எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் நடந்த காட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்கட்சியின் காட்டாட்சி நடந்ததை இளைஞர்களுக்கு முதியவர்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், இதனை பாஜவினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஸ்திரத்தன்மை இருக்கும் போது வளர்ச்சி வேகம் பெறும் எனவும், இது தான் பீஹாரில் தேஜ அரசின் பலம். இதனால் தான் பீஹார் வேகம் எடுத்துள்ளது. மீண்டும் தேஜ கூட்டணி அரசு வேண்டும் என இளைஞர்கள் உற்சாகமாக சொல்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு ஓட்டில் அனைத்து சக்திகளும் அடங்கி உள்ளன என்றும், ராமர் கோயில் கட்டுவதற்கான சூழ்நிலையை மக்கள் அளித்த ஓட்டு தான் ஏற்படுத்தியது என்றும் அறிவித்துள்ளார். 'ஆப்பரேஷன் சிந்தூர்' எடுக்கப்பட்டதுடன், நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அத்துடன், இதுதான் ஓட்டின் வலிமை மாநிலத்தில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், மீண்டும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஆட்சி மீண்டும் வருவதை விரும்பவில்லை அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi says people will not forget RJDs demonstration in Bihar even after 100 years


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->