இந்தியா தான் நம்பர் ஒன்! இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகி விட்டது - பிரதமர் மோடி பெருமிதம்! - Seithipunal
Seithipunal


இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகி விட்டதாக, விவசாய நிபுணர் நிபுணர்களின் 32ஆவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "நம் நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருந்து வருகிறது. தற்போதைய நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க கூடிய விவசாயத்திற்கு உந்துதலை கொடுத்துள்ளது. 

நம் நாட்டின் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளோம். தற்போது இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது. 

நம் நாட்டில் பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் நம்பர் ஒன் நாடாக உள்ளது. மேலும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை, பருத்தி, டீ உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய இரண்டாவது நாடாக நம் இந்தியா உள்ளது.

இந்தியாவின் உணவு பாதுகாப்பு என்பது மற்ற நாடுகளுக்கு கவலை அளிக்கும் ஒரு காலம் இருந்தது. ஆனால், நம்முடைய இந்தியா உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் உலகத்திற்கு தீர்வு வழங்க பணியாற்றுக் கொண்டிருக்கிறது. 

நம் நாட்டின் விவசாயத்தின் மூலம் 90 சதவீத விவசாயிகள் மிகச் சிறிய அளவிலான நிலத்திற்கு தான் சொந்தக்காரர்கள். ஆனால் இந்த மிகச் சிறிய விவசாயிகள் தான் நம் நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர்" என்று பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi say about india


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->