டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!!
pm modi respect mahathma gandhi memorable place in delhi
டெல்லியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர தேசத்தந்தை மகாத்மா காந்தி. இவருடைய பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
English Summary
pm modi respect mahathma gandhi memorable place in delhi