சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளான அடுத்த சில நிமிடங்களில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது, யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. 

இந்த கொடூரமான விபத்தில் சிக்கி இதுவரை 261 பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்த ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவிக்கையில், "இது ஒரு வேதனையான சம்பவம். காயமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சந்தித்தே. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு வழி செய்துள்ளது.

இந்த விபத்து குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi on Odisha Train Tragedy Spot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->