ஒமைக்ரான் பரவல்.. பிரதமர் மோடி ஆலோசனை.!! வெளியாகப்போகும் புதிய கட்டுப்பாடுகள்.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, சண்டிகர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவிலோ ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு ஒமைக்ரனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi meeting for omicron


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->