நேபாளத்தில் விமானம் விபத்து - பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் - Seithipunal
Seithipunal


நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் நேற்று காலை 10:33 மணிக்கு புறப்பட்ட விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்காராவில் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த துக்கமான நேரத்தில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi condolences family of Nepal plane crash victims


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->