டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்து உள்ளனர். பல வணிக வளாகங்கள் இயங்கிவரும் அந்த நான்கு மாடி கட்டிட வளாகத்தில் மேல்தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. 

உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில், டெல்லியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi announces relief to delhi fire accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->