''ராகுல் காந்தியின் அணுகுமுறை இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை. மாறாக பாஜகவிற்கே உதவுகிறது''; பினராயி விஜயன் ..!
Pinarayi Vijayan says Rahul Gandhis approach has not strengthened the INDIA alliance
ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை, இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை. மாறாக, பாஜகவுக்கே உதவுகிறதாக பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசுகையில், கேரளத்தில் நிலவும் அரசியல் போட்டி காரணமாக பினராயி விஜயனைத் தழுவ மாட்டேன் என கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வரும், சிபிஎம் மூத்த தலைவருமான பினராயி விஜயனிடம் கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், யார் யாரைத் தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என்றும், ஆனால், ராகுல் காந்தி, நரேந்திர மோடியைத் தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

ராகுல் காந்தி, மோடியைத் தழுவுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராகுல்காந்தியின் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளதோடு, இது ராகுல் காந்தியின் அணுகுமுறையையும் அவர் இண்டியா கூட்டணியை எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் தேவை. ஆனால், இப்போது இது குறித்து நான் விரிவாகப் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மட்டுமல்ல, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும், காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும் கூட கூட்டத்தின்போது ஆட்சேபனைகளை எழுப்பி உள்ளார்கள். காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார்கள் என்று பிரனாயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சூழலுக்கு காங்கிரஸின் அணுகுமுறையும் ராகுல் காந்தியின் அணுகுமுறையுமே காரணம் என்றும், ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை, இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை. மாறாக, இது பெரும்பாலும் பாஜகவுக்கே உதவுகிறது என்றும், இத்தகையச் செயல்கள் மூலம் பாஜகவின் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படுபவராக ராகுல் காந்தி மாறுகிறார் என்று செய்தியாளர்களிடம் ராகுலின் செயல்பாடுகள் குறித்து பிரனாயி விஜயன் விமர்சித்துள்ளார்.
English Summary
Pinarayi Vijayan says Rahul Gandhis approach has not strengthened the INDIA alliance