பினராயி விஜயன் தொகுதியில் பகீர்! கொத்துக்கொத்தாக சிக்கிய 5 வெடிகுண்டுகள்...! - பெரும் சதி முறியடிப்பா...?
Pinarayi Vijayan constituency 5 bombs found cluster big conspiracy foiled
கேரள மாநிலத்தின் முதல்வராக பதவி வகிப்பவர் பினராயி விஜயன். அவர் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கேரளத்தில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நேரத்தில், தர்மடம் தொகுதிக்குட்பட்ட தன்னடா பகுதியில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எடக்காடு காவலர்கள் மற்றும் சிறப்பு அணியினர் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த நானு என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 5 வெடிகுண்டுகள் மற்றும் சுமார் 3 கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் அவற்றை பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்தனர். முதல்வர் பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் தொகுதிக்குள் இத்தகைய வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pinarayi Vijayan constituency 5 bombs found cluster big conspiracy foiled