மக்களுக்கு குட் நியூஸ் - அதிரடியாக உயர்ந்த பி.எப் வட்டி விகிதம்.!   - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் எதிரொலியாக மார்ச் 2022இல், 2021-2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த 2023 மார்ச் மாதம் மாதம் டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 2022-23ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் படி, இந்த வட்டி விகிதமானது 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பிடிஐ நிறுவனம் மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் வட்டியினை 0.10% உயர்த்தவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

 மாத சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவீடுகளுக்காக பிஎஃப் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. அதனை மத்திய அரசு 8.25 சதவீதமாக உயர்த்தவுள்ளதாக தெரியவந்துள்ளது. இது நீண்டகால தாக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pf money intrest increase in india


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->