கோடாரியை வைத்து சம்பவம் செய்த நபர்! தந்தை, தாய், சகோதரி என அனைவரும் காலி...!
person who committed incident with an axe Father mother sister all of them are dead
உத்தரப் பிரதேசத்தில் காசிப்பூரில் நிலத்தகராறு காரணமாக ஒரு நபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை ஆத்திரத்தில் கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிறகு குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான காவலர்கள் வலைவீசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இன்று தில்லியா கிராமத்தில் இந்த கொடூரமான கொலைகள் நடந்துள்ளன.
காவல்துறையின் தகவல் சேகரிப்புப்படி, சந்தேக நபர் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியைக் கோடாரியால் கொலை செய்துள்ளார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே அநியாயமாக பலியாகினர்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. குடும்பத்திற்குள் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறுதான் இந்த கொலைகளுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்த மாதம், காஸ்கஞ்சில் நடந்த இதேபோன்ற ஒரு வழக்கில், ஒன்பது குழந்தைகளின் தாயான ரீனா மற்றும் அவரது காதலன் ஹனிஃப் ஆகியோர் அவரது கணவர் ரத்திராமை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரீனா மற்றும் ஹனிஃப் இடையேயான காதல் உறவுக்கு ரத்திகாம் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் திட்டமிட்டு ரத்திராமை கொலை செய்து, அவரது உடலை ஒரு கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
English Summary
person who committed incident with an axe Father mother sister all of them are dead