நடு வானில் விமான கதவை திறந்த பயணி - அடுத்து நடந்தது என்ன?
passenger open flight window door in mid air
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வாரணாசி வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானியின் அறைக் கதவை திறக்க முயன்றதால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு விமான அமைப்புகள் பற்றி எதுவும் தெரியாது. தனது பெயர் மணி. முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கிறேன். அவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் குழுவாக வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் வாரணாசியில் விமானம் தரையிறங்கியபோது, அங்கு தயாராக இருந்த போலீசாரிடம் மணியை விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
passenger open flight window door in mid air