ஆண் நண்பர்களுடன் பேசிய மகள்.. ஆத்திரத்தில் பெற்றோர் செய்த செயல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Parents attempt kill his daughter In Up
ஆண் நண்பருடன் பேசியதால் மகளை கொலை செய்ய முயன்ற பெற்றோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் வயதில் ஆண் பெண் நட்பு என்பது சாதாரமான விஷயம், கல்வி நிலையங்களில் உடன் படிக்கும் மாணவர்களிடம்
நட்பு வருவது சகஜம். ஆனால், தன்னுடைய பெண் ஆண் நண்பர்களுடன் பேசியதால் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கங்காநகர் பகுதியில் வசிப்பவர் பப்லு மற்றும் ரூபி தம்பதி. இவரது 11 வயது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துரையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அந்த சிறுமி பெற்றோருடன் தான் பஜாரில் இருந்தது வெளியே வந்தது தெரியவந்தது. இதனால், பெற்றோர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோரே மகளை கொலை செய்யும் நோக்கோடு கால்வாயில் தள்ளிவிட்டது தெரிவித்து வந்துள்ளது.
விசாரணையில், அந்த சிறுமி ஆண் நண்பகளிடம் நீண்ட நேரம் போன் பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெற்றோருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கண்டித்தும் அவர் கேட்காததால் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து, பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
English Summary
Parents attempt kill his daughter In Up