பான் கார்டு மோசடி: மளிகைகடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்!
PAN card fraud Grocery store owner receives Rs141 crore income tax notice
உத்தரப்பிரதேசம் புலந்த்ஷாஹர் மாவட்டம், நயாகஞ்சைச் சேர்ந்த சுதீர் என்ற நபர் தனது வீட்டிலேயே ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு வருமான வரித்துறையிலிருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.
அந்த நோட்டீஸில், சுதீரின் பெயரில் இயங்கும் நிறுவனங்கள் மூலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.141 கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுதீர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:"டெல்லியில் 6 நிறுவனங்களை உருவாக்க, எனது பான் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் 2022-ஆம் ஆண்டிலும் எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வருமான வரித்துறையினரிடம் விளக்கினேன். ஆனால் தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது," என்றார்.
போலீசார் சுதீரின் புகாரை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.சமீப காலமாக, பிறரின் பான் கார்டு விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்று போலி நிறுவனங்களை உருவாக்குவது, வங்கிக் கணக்குகளைத் திறப்பது, கடன்களைப் பெறுவது, அல்லது வரி ஏய்ப்பதற்குப் பயன்படுத்துவது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடிகள் பலர் எதிர்பாராத விதமாக வருமானவரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளைப் பெற்றபோது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.
English Summary
PAN card fraud Grocery store owner receives Rs141 crore income tax notice