காஷ்மீரில் மீண்டும் பதட்டம்... எல்லையில் புகுந்த தற்கொலை படை பயங்கரவாதிகள்.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்துவருகிறார். இதற்காக அமெரிக்கா மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளிடம் புகார் அளித்தது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பல நாடுகள் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

தற்போது ஏதாவது செய்து உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டம் தீட்டிவருகிறது. இதற்கு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் தான் சரியாக இருக்கும் என கருதிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்கொலை பயங்கரவாதிகளை தயார்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்துவருகிறது. மொத்தம் 7 தற்கொலை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பக்ரீத் பண்டிகையான இன்றே தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்ப்பதால் பல இடங்களிலும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உஷார் படுத்தியுள்ளனர்.

உடனடியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாதபட்சத்தில் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. எனவே காஷ்மீர் முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakistan next plan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->