'ஆப்பரேஷன் சிந்தூரால் நொறுக்கப்பட்ட பாகிஸ்தான் அதன் வலியை மறுக்காது': பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்..!
Pakistan crushed by Operation Sindoor will not deny its pain says Defence Minister Rajnath
'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தான் நொறுக்கப்பட்டதும், அதில் ஏற்பட்ட வலியை இன்றும் அந்நாடு மறக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார்.
அத்துடன், தற்போதைய காலத்தில் எல்லையில் மட்டும் போர்கள் நடக்கவில்லை. அவை சமச்சீரற்ற வடிவத்தை எடுத்துள்ளன. பாரம்பரிய பாதுகாப்பு பார்வை தற்போதைய காலத்துக்கு உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும், வலுவான ஆயுதப்படைகளை உருவாக்கவும் மத்திய அரசும் பல விதமான தைரியமான மற்றும் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் ஒன்று, முப்படை தலைமை தளபதி பதவி என்றும், 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, முப்படைகளின் ஒருங்கிணைந்தும், கூட்டாக செயல்பட்டதை நாம் பார்த்தோம். இதனால் பாகிஸ்தான் நொறுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இன்றும் கூட அந்நாடு அந்த வலியை மறக்கவில்லை என்வும், சிவில் மற்றும் ராணுவத்தை ஒன்றிணைப்பதை சாதாரண ஒருங்கிணைப்பாக மட்டும் பார்க்கக்கூடாது. இந்த நடவடிக்கை இந்தியாவில் தொடர்ச்சியாக நடக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தியா பாதுகாப்புத்துறையில் உற்பத்தி மையமாக மாறி வருகிறதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது என்றும், அதில், தனியார் துறையின் பங்களிப்பு ரூ.33 ஆயிரம் கோடிஎன்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Pakistan crushed by Operation Sindoor will not deny its pain says Defence Minister Rajnath