மீண்டும் மீண்டும்  ஐநாவில் அசிங்கப்படும் பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சிந்திக்கள், மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர்  நடத்தி வரும் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அடக்குமுறைகள் குறித்து ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா புகார் எழுப்பி உள்ளது.

ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பாலிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், ஐநாவுக்கான குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதன்மை செயலாளர் குமம் மினிதேவி இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் வலுக்கட்டாயமான மதமாற்றம், அதிகாரமில்லாத கைது நடவடிக்கைகள், பலர் காணாமல் போன சம்பவங்கள், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலைகள் இது போன்ற பாகிஸ்தானின் வன்கொடுமைகளை இந்தியா சுட்டிக் காட்டி இந்தியா பேசியது. 

மேலும், காஷ்மீரில்  370 சிறப்பு அந்தஸ்து றது செய்யப்பட்டது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும் அதில் தலையிட வேறு எந்த ஒரு நாட்டிற்கும் அதிகாரம் இல்லை என இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பாகிஸ்தான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது இந்த தீர்மானத்தை ஐநா ஏற்க மறுத்துவிட்டது. இதையயடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை இந்தியா எழுப்பியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan complained united nations human right council


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal