மனைவியுடன் உடன்கட்டை ஏறிய கணவன்.! எறியும் தகன மேடையில் உயிரை விட்ட சோகம்.! - Seithipunal
Seithipunal


உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது, அவருடன் அவரின் கணவரும் உடன்கட்டை ஏறி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டு இருந்தாலும், அளவு கடந்த காதல், அளவு கடந்த அன்பின் மிகுதி காரணமாக கணவன் உயிர் இழக்கும் போது மனைவியும் உயிர் விடும் சம்பவங்களும், மனைவி உயிர் இழக்கும் போது கணவனும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் ஒரிசா மாநிலம், காலஹன்டி மாவட்டத்திற்கு உட்பட்ட சியால் கிராமத்தை சேர்ந்தவர்  நிலமணி சாபர். இவருக்கு வயது 65 ஆகிறது. இவருடைய மனைவி ரெய்பாரி (வயது 60). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரெய்பாரிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி சடங்கு அதே கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நடைபெற்றது. அவர்கள் வழக்கப்படி அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச்சடங்குகள் முடிந்தவுடன் மகன்கள் நான்கு பேரும் அருகில் உள்ள குளத்திற்கு தலைமுழுக சென்றனர். அப்போது திடீரென மனைவியின் உடல் எரிந்து கொண்டிருந்த அதே தகன மேடையில் நிலமணி சாபர் குதித்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரின் மகன்கள் மற்றும் அருகிலிருந்த நபர்கள் அதிர்ந்து போயினர். இதில், நிலமணி சாபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியுடன் கணவன் உடன் கட்டை ஏறி இருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orisa husband dead with his wife


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal