பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடம் - எந்த வகுப்புக்கு தெரியுமா?
operation sindoor syllabus in school students
சமீபத்தில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்திய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மகத்துவத்தை மாணவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன? என்பதையும், தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றன? என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் இந்தப் பாடம் தயாரிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சிறப்பு பாடத்தொகுதி மொத்தம் இரண்டு பகுதியாக உருவாக்கப்படுகிறது. அதாவது, 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
operation sindoor syllabus in school students