டிசம்பர் 22 முதல் சீனாவுக்குக்குக்கான ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்..!
Online visa application process for China starts from December 22nd
வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் சீனாவுக்கான ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை தொடங்குகிறதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான சீன தூதரர் ஜூபெய்ஹோங் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு கூறியுள்ளதாவது;
''சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம்.
மேலும், விவரங்களுக்கு புதுடில்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம்.
வேறு ஏதேனும் தகவல்களுக்கு +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.' என்று ஜூபெய்ஹோங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Online visa application process for China starts from December 22nd