உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1268 தீர்ப்புகள் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்திருந்தார். மேலும், அவர் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதற்காக ஒரு குழுவையும் நியமித்திருந்தார். 

இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது, 

"எலக்ட்ரானிக்ஸ் சுப்ரீம் கோர்ட்டு ரிப்போர்ட்" என்ற திட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் இந்தி, ஒடியா, மராத்தி, அசாமி, கரோ, கன்னடம், காசி, மலையாளம், நேபாளி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 1268 தீர்ப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் தீர்ப்புகள் மொழியாக்கம் செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one thousand and two hundrad and sixty eight supreme court judgements today release


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal