தீவிர வேட்டையில் ரெயில்வே துறை.! 16 மாதம் 177 ஊழியர்கள் பணிநீக்கம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக இந்திய ரெயில்வே துறையில் சரியாகச் செயல்படாத, ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், நாள் ஒன்றுக்கு மூன்று பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த வகையில், 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டதுடன் 38 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, நேற்று இரண்டு மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் ரூ. 5 லட்சமும், மற்றொருவர் ராஞ்சியில் ரூ.3 லட்சமும் லஞ்சம் வாங்கியதால் பிடிபட்டவர்கள். அவர்களிடம் "வேலை செய்யாமல் வெறும் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரயில்வே துறையில் இடமில்லை" என்று அமைச்சர் அஸ்விணி வைஷ்னவ் தெளிவுபடுத்தினார். 

அதன்படி கடந்த 2021 ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், ஒரு ஊழல் அதிகாரி அல்லது செயலற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகள் பயிற்சி சேவைகள் விதி 56 j -ஐப் பயன்படுத்தி எடுக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one seventy seven employees dismiss in railway department


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->