மத்திய பட்ஜெட் : புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று மத்திய பாஜக அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு, பின்னர் உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் பல சுவாரசிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதாவது, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, தங்கத்தின் இறக்குமதி வரி உயர்வு, ஆன்லைன் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு உயர்வு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வரி குறைவு என்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சுகாதாரத் துறை தொடர்பான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,, நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். 

அதன் விவரம் வருமாறு:- "இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 157 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும். 

நாட்டில் பரவி வரும் ரத்த சோகை நோயை 2047-ம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழித்துக்கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள 7 கோடி மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கப்படுவதுடன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. 

இந்த பரிசோதனைக்கூடங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதிக்கப்படும். 

அதேபோல், மருந்து துறையில் ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை சிறந்த மையங்கள் மூலம் தொடங்கப்படும். அதில், குறிப்பிட்ட வகைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு தொழில்துறையை அரசு ஊக்குவிக்கிறது. 

தற்போதுள்ள நிறுவனங்களில், மருத்துவ சாதனங்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட பல்துறை படிப்புகள் மற்றும் திறமையான மனித வளம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆதரவு வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one hundrad and fifty seven nursing colleges open union minister nirmala seetharaman budget


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->