ஓடிசா ரயில் விபத்தில் 48 மணி நேரத்திற்கு பின் இளைஞர் உயிருடன் மீட்கப்பட்ட கொடுமை!
Odisha train Accident 48 hrs
ஓடிசா ரயில் விபத்தில் சுமார் 48 மணி நேரத்திற்கு பிறகு இளைஞர் உயிருடன் இருந்ததும், அவரை மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கோர ரயில் விபத்தில், 275 பேர் பலியாகினர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தை சீரமைத்து நேற்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்து நடந்த இந்த பகுதிகயில் நேற்று காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உருக்குலைந்த நிலையில் அப்புறப்படுத்தப்பட்டு கிடந்த ரயில் பெட்டிக்கு அருகே இருந்த புதரில் இருந்து மனித குரல் ஒன்று கேட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த புதரில் போலீசார் சோதனை செய்ததில், அங்கே படு காயங்களுடன் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்து உள்ளார்.
அவருக்கு தண்ணீர் கொடுத்த போலீசார் முதலுதவி செய்த பிறகு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Odisha train Accident 48 hrs