மருமகனை இரவு முழுவதும் மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மாமியார்! அதிரவைக்கும் பின்னணி!
Odisa mamiyar attack marumakn
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். அவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. கடந்த ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் போது பாலியர் சிங் மனைவியை தாக்கியதால், சுபத்ரா தாயாரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர் ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில், சுபத்ரா சில மாதங்கள் தாய் வீட்டில் தங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சுபத்ரா தாய் வீட்டிற்குச் சென்றார். ஆனால் ஒரு வருடம் ஆன பின்னும் கணவனுடன் சேரவில்லை. மனைவி திரும்பி வருவார் என காத்திருந்த பாலியர் சிங், இறுதியில் மாமியார் வீட்டிற்குச் சென்று அழைத்து வர முயன்றார்.
ஆனால் அவரை கடும் கோபத்தில் இருந்த மாமியார் தாக்கினார். அவரின் அலறலைக் கேட்ட உறவினர்களும் அங்கு வந்து, பாலியர் சிங்கை அடித்துக் கொண்டே இருந்தனர்.
தொடர்ந்து அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து இரவு முழுவதும் தாக்கினர். வலியில் கதறியபோதும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. கிராம மக்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் கிடைத்த போலீசார் அங்கு சென்று பாலியர் சிங்கை மீட்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, சுபத்ரா, அவரது தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாலிபரை கம்பத்தில் கட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Odisa mamiyar attack marumakn