பொதுமக்களே உஷார்.. குடிநீரின் மூலம் பரவும் புதிய வகை வைரஸ்.. 98 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பதும், அதன் மூலம் மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட சுமார் 98 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர்.

இதில், 98 மாணவர்களுக்கும் நோரோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Noro virus affected in kerala 98 students admitted hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->