இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி விபத்து! 5 வயது சிறுமி பலி! பெரும் சோகம்!
Noida Car Accident
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், வேகமாக வந்த சொகுசு கார் மோதி, 5 வயது சிறுமி உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு, சிறுமி தனது தந்தை மற்றும் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், எதிர்பாராத விதமாக ஹரியானா பதிவு எண்ணைக் கொண்ட பிஎம்டபிள்யூ கார் வாகனத்தை மோதியது. இந்த மோதி விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரை ஓட்டிய யாஷ் சர்மா மற்றும் அவருடன் இருந்த அபிஷேக் ராவத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணமாக அதிக வேகமே கருதப்படுகிறது.
சிறுமியின் மரணம் நொய்டா மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மோசமான சாலைகள், கட்டுப்பாடற்ற வேகம் தான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.