அரசு அலுவலகங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை - காரணம் என்ன?
no use whats app in government offices in jammu kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டது.
இந்த தடை உத்தரவின் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.

இதற்கு பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்தத்தடை உத்தரவு முடிவு கடந்த மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
English Summary
no use whats app in government offices in jammu kashmir