இனி ரத்து செய்தாலும் இழப்பு இல்லை...! - விமான பயணிகளுக்கு நல்ல செய்தி
No more losses even if you cancel Good news for air travelers
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பின் அவற்றை ரத்து செய்யும்போது, இதுவரை பயணிகளுக்கு வழங்கப்பட்ட ‘ரீபண்ட்’ தொகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் அடிக்கடி பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இந்த நிலையை சரிசெய்ய, இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) புதிய சீர்திருத்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
அதன் புதிய வரைவு விதிமுறைகளின் படி,"டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள், பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும்".இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், விமான பயணிகளுக்கு பெரும் நிம்மதியையும் நியாயத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
No more losses even if you cancel Good news for air travelers