பீஹார் சட்டசபை: தேஜ கூட்டணி கட்சித் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு: நாளை முதல்வராக பதவியேற்பு..!
Nitish elected as NDA alliance assembly party leader
தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார, நாளை (நவம்பர் 20) பீஹாரின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பீஹாரில் சட்டசபை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அபாரமாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 10-வது முறையாக நிதிஷ்குமார் நாளை முதல்வர் பதவியேற்கிறார். அதன் முன்னோட்டமாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், சாம்ராட் சவுத்ரி, சிராக் பாஸ்வான், விஜய்குமார் சின்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமாரை, எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அவரின் பெயரை சாம்ராட் சவுத்ரி முன்மொழிய, அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும், ஆளுநர் ஆரிப் முகமதுவை சந்திக்கும் நிதிஷ்குமார், அவரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து, நாளை (நவம்பர் 20) அவருக்கான பதவியேற்பு விழா டெல்லி காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
English Summary
Nitish elected as NDA alliance assembly party leader