நிர்பயா வழக்கு... தூக்கு தண்டனை தேதி உறுதியானது.! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

நிர்பயாவை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றம் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மீதமிருந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையிலையே தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் டெல்லி ஆளுநரிடத்திலும் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார். 

இந்நிலையில் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுவை குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirbhaya cace


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->