தெலுங்கானா : ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா : ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம்.!

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் எல்.பி. நகர் பகுதியில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த பாலைத்திற்கான கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் தருவாயில் இருந்ததால், பாலத்தை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்திற்கு அடியில் உறங்கி கொண்டிருந்த ஒன்பது தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி இடிபாடுகளை அகற்றி 9 தொழிலாளர்களையும் மீட்டனர்.

அதன் பின்னர் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட பலம் திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine peoples injured for new bridge collapse in telungana hydrabad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->