கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பத்தினர் கொடுமை: திருமணமான 06 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!
Newlywed commits suicide 6 months after marriage due to extra dowry in Karnataka
வரதட்சணை கொடுமையால் 23 வயது இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கட்டினகாரு அருகே எடமனே கிராமத்தை சேர்ந்தவர் மாலாஸ்ரீ . இவருக்கும் சிவமொக்கா தாலுகா கும்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட குரம்பள்ளி அருகே கூஜானுமக்கி கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி திருமணம் நடந்துள்ளது.
இவர்களின் திருமணத்துக்கு பிறகு கணவருடன் கூஜானுமக்கி கிராமத்தில் மாலாஸ்ரீ வசித்து வந்துள்ளதோடு, திருமணத்தின் போது மாலாஸ்ரீயின் பெற்றோர் நகை, பணம், பொருட்கள் என வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
திருமணமாகி 06 மாதங்களே ஆனா நிலையில், கணவன் அசோக் மற்றும் அவரது பெற்றோர், கூடுதல் வரதட்சணை கேட்டு, மாலாஸ்ரீயை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், கடந்த மாதம் மாலாஸ்ரீ கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்தி அசோக் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் வரதட்சணை கேட்டு மாலாஸ்ரீயை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்து போன மாலாஸ்ரீ, நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மக்களில் இறப்பு செய்தி கேட்டுஅதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளின் இறப்புக்கு கணவர் அசோக், அவரது பெற்றோரே காரணம் என கும்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் கும்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலாஸ்ரீயின் கணவர் அசோக்கை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Newlywed commits suicide 6 months after marriage due to extra dowry in Karnataka