அமெரிக்க அதிபரின் வருகைக்காக  8 அடி உயரம் வரை சுவர் எழுப்பி குடிசைகளை மறைக்கும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக அந்த மாநிலத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வருகின்ற 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வரை சுமார் 500 முதல் 600 மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

6 முதல் 8 அடி உயரம் வரை எழுப்பப்படும் இந்தச் சுவர், அங்குள்ள குடிசை குடி இருப்புகளை மறைக்கவே கட்டப்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அங்கு பூச்செடிகள் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new wall for gujarat for trump coming


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->