AI வீடியோவை காட்டி மிரட்டல்.. தங்கையை எண்ணி அண்ணன் தற்கொலை!
AI technology video thread haryana Youth suicide
அரியானா மாநிலத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ராகுல் பாரதியின் செல்பேசி ஹேக் செய்யப்பட்டு, அதில் இருந்த அவரது 3 தங்கைகளின் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்ட போலியான படங்களும் வீடியோக்களும் உருவாக்கப்பட்டன. பின்னர், அவை ராகுலுக்கே அனுப்பப்பட்டு, சாஹில் என்ற நபர் அவரிடம் ரூ.20,000 கேட்டு மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாட்சப்பில் நடந்த உரையாடலில், “பணம் கொடுக்கவில்லை என்றால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன்” என சாஹில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல், வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்தால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ராகுல் மரணத்திற்கு முன் எழுதியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பில், “நான் குற்றமற்றவன், என் தங்கைகளின் கௌரவம் காப்பாற்ற முடியாதது தான் என் தவறு” என எழுதப்பட்டிருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து ராகுலின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாஹில் மற்றும் அவரது துணைவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
AI technology video thread haryana Youth suicide