மாணவர்களுக்கு எச்சரிக்கை: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்: தமிழகத்தில் உள்ளதா..? - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டு பட்டியலின்படி, நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் படி, தலைநகர் டில்லியில் அதிகமாக, 10 போலி பல்கலைகழகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உத்தரபி பிரதேசம் உள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைகழகங்கள்.முழு பட்டியல் பின்வருமாறு;

டில்லி:

01. அகில இந்திய பொது மற்றும் உடற்கல்வி அறிவியல் நிறுவனம், (AIIPHS) அலிப்பூர்

02.வணிக பல்கலைக்கழகம்(Commercial University) தார்யாகஞ்ச்

03. யுனைடெட் நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University)

04. வொகேஷனல் பல்கலைக்கழகம்(Vocational University)

05. ஏடிஆர் மத்திய நீதித்துறை பல்கலை (ADR Centric Juridical University) ராஜேந்திரா பிளேஸ்

06. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம், புதுடில்லி

07.விஸ்வகர்மா சுயதொழில் திறந்தவெளி பல்கலை, சஞ்சய் என்கிளேவ்

08. ஆன்மீக பல்கலை, ரோஹிணி

09. ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி பல்கலை.(WPUNU), பிதாம்புரா

10. மேலாண்மை மற்றும் பொறியியல் நிறுவனம், கோட்லா, முபாரக்பூர்

உத்தர பிரதேசம்:

01. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத்

02. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கலை. அலிகார்

03. பாரதிய ஷிக்ஷா பரிஷத் பாரத் பவன், மாத்யாபுரி, லக்னோ

04. மகாமாயா தொழில்நுட்ப பல்கலை. நொய்டா

ஆந்திரா:

01. கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலை பல்கலை. குண்டூர்

02. இந்திய பைபிள் திறந்தவெளி பல்கலை. விசாகப்பட்டினம்

கேரளா:

01.சர்வதேச இஸ்லாமிய தீர்க்கதரிசன மருத்துவ பல்கலை.(IIUPM), கோழிக்கோடு

02. செயிண்ட் ஜான்ஸ் பல்கலை. கிஷன்நட்டம்

மேற்கு வங்கம்:

01. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் பல்கலை. கோல்கட்டா

02. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலை. தாகூர்புகூர், கோல்கட்டா.

மஹாராஷ்டிரா:

01, ராஜா அராபிக் பல்கலை. நாக்பூர்

புதுச்சேரி:

01. ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், திலாஸ்பேட், வழுதாவூர் சாலை

மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டு யுஜிசி சட்டத்தின் பிரிவு 2(f) அல்லது 3ன் கீழ் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள். எனவே,இதுபோன்ற மோசடியான கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு பல்கலைகழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 fake universities across the country


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->