இந்தியாவால் தேடப்படும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கும் வங்கதேசம்..!
Bangladesh gives red carpet welcome to controversial Islamic cleric wanted by India
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான ஜாகிர் நாயக்கிற்கு, மொஹமட் யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரான ஜாகிர் நாயக், தனது பணியில் இருந்து விலகி, முஸ்லிம் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தளமாகக் கொண்ட இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத ரீதியில் மோதல்களை ஏற்படுத்துவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் பண மோசடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற இவருக்கு மலேஷியா புகலிடம் அளித்துள்ளது.
இந்நிலையில், ஜாகிர் நாயக் மத சொற்பொழிவுக்காக நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் நவம்பர் 28 முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜாகிர் நாயக்கின் முதல் வங்கதேச பயணம் இதுவாகும்.
English Summary
Bangladesh gives red carpet welcome to controversial Islamic cleric wanted by India