மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; நாளை 43 ரயில்கள் பல விமான சேவைகள் ரத்து..!
43 trains and many flights canceled tomorrow as a precautionary measure against Cyclone Monda
தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருவதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை அக்டோபர் 28-ஆம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் விபரம் பின்வருமாறு:
IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்
TX-2875 பெங்களூரு- விஜயவாடா
TX-2876 விஜயவாடா- பெங்களூரு
IX-976 ஷார்ஜா-விஜயவாடா
IX-975 விஜயவாடா-ஷார்ஜா
IX2743 ஹைதராபாத்-விஜயவாடா
T X-2743 விஜயவாடா-விஜாகாடா
English Summary
43 trains and many flights canceled tomorrow as a precautionary measure against Cyclone Monda