எம்எல்ஏ உள்ளிட்ட 6 முக்கிய புள்ளிகளை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக!
Bihar Election 2025 BJP MLA
பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி. கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேசமயம் சிராக் பஸ்வான் தலைமையிலான கட்சி 29 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொகுதிகள் பகிர்வில் அதிருப்தி அடைந்த பல தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராகவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை போட்டியிலிருந்து விலகுமாறு கட்சி மேலிடம் கேட்டும், பலர் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளனர்.
கஹல்கான் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பவன் யாதவுக்கு இந்த முறை பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் கட்சி கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதேபோல் சன்னி யாதவ், ஷ்ரவன் குஷ்ஹகா, உத்தம் சவுத்ரி, மாருதி நந்தன் மாருதி மற்றும் பவன் சவுத்ரி உள்ளிட்ட பலரும் கட்சி முடிவுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிய இவர்களுக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, சஸ்பெண்ட் செய்துள்ளது.
English Summary
Bihar Election 2025 BJP MLA