ஆந்திரா பெண்கள் உற்சாகம்: இனிமேல் 4 குழந்தைகள் பெற்றால் சொத்து வரி விலக்கு மற்றும் ஊக்கத் தொகை: அமலுக்கு வரும் புதிய சட்டம்..!
New law on property tax exemption and incentive for having 4 children in Andhra Pradesh
ஆந்திராவில் 2047-ஆம் ஆண்டுக்குள் முதியவர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் அபாயம் உள்ளது என்பதால் அதை மனதில் கொண்டு மக்கள் தொகையை உயர்த்த மேலாண்மை திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது.
அதன்படி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றதால் அவர்கள் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களை தேடி செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.
-tkhjc.png)
இவ்வாறு செயற்கை முறை கருத்தலுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது என்பதால் இதற்கான நிதி உதவியை வழங்க மாநில அரசு முன் வந்துள்ளது. அத்துடன், ஆந்திராவில் இனிமேல் 04 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் குடும்பத்திற்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவுள்ளது. அதாவது, 03,04-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 06 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தபடவுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பு மையங்களும் அமைக்கப்படவுள்ளன. விரைவில் இதுகுறித்து புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சலுகை திட்டங்களால் ஆந்திராவில் உள்ள பெண்கள் உற்சாகமாகமடைந்துள்ளனர்.
English Summary
New law on property tax exemption and incentive for having 4 children in Andhra Pradesh