ரெயில் சேவைகளில் அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமனம் செய்ய வேண்டும் - திரவுபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


நேற்று ரெயில்வேயில், குடியரசுத் தலைவர் மாளிகையில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள், தங்கள் பயிற்சி காலத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, அவர்களிடையே திரவுபதி முர்மு பேசியதாவது:- 

"ரெயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் வசதியாக பயணம் செய்கிறார்களா என்பதை ரெயில்வே துறை உறுதி செய்தால் தான் மக்களுக்கு இனிமையான நினைவுகள் நீடிக்கும். 

அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் தேவைகளை ரெயில்வே துறை பூர்த்தி செய்து, அவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை அளிக்க வேண்டும். 

தற்போது இந்தியா, தேசிய மற்றும் உலக அளவில் முன்னேறி வருகிறது. இங்கு மக்கள் நடமாட்டமும், பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை வருங்காலத்தில் சற்று அதிகரிக்கும். 

அதனால், இந்திய ரெயில்வே, நவீன மின்னணு தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும்.அதேபோல், பொதுமக்களுக்கு  பாதுகாப்பானதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதுவதாகவும் அதேசமயம் வசதியானதாகவும், உயர்தரமானதாகவும் கூடிய ஒரு பயணம் அமைய புதிய வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். 

மேலும், ரெயில் சேவைகளில் அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமனம் செய்ய வேண்டும்.  பொதுமக்களின் வாழ்வாதாரமாக ரெயில்கள் விளங்கி வருகின்றன. சரக்கு வழித்தடங்களில் 56 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த வழித்தடங்களை பயன்படுத்தும்போது, போக்குவரத்து செலவு குறையும்" என்று திரவுபதி முர்மு பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new appointed railway officers visit draubati murmu for blessings


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->